கோவில்பட்டியில் “தோன்றின் புகழோடு தோன்றுக ” மாவட்ட அளவிலான கருத்தரங்கு
கோவில்பட்டியில் “தோன்றின் புகழோடு தோன்றுக “மாவட்ட அளவிலான கருத்தரங்குரோட்டரி மாவட்ட 3212 சார்பில் தோன்றின் புகழோடு தோன்றுக எனும் தலைப்பில் மாவட்ட அளவிலான கருத்தரங்கு கோவில்பட்டி சௌபாக்கியா மஹாலில் வைத்து நடைபெற்றது.கருத்தரங்கிற்கு மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மன் விநாயகா ரமேஷ் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார்.ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன்,கருத்தரங்கு இணைசேர்மன் வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மாவட்ட பயிற்றுனர் ஷேக் சலீம் கருத்தரங்கின் நோக்க உரையாற்றினார்.ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி.ஆர்.முத்து கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.ரோட்டரி மாவட்ட 2982ன் மண்டல பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம்,பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட 3212 வருங்கால ஆளுநர்கள் முத்தையா பிள்ளை,மீரான் கான்சலீம்,தினேஷ் பாபு,ரோட்டரிமாவட்ட செயலாளர் குருசாமி, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு,கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம்,மணிகண்ட மூர்த்தி,காளியப்பன் உள்பட ராமநாதபுரம்,சிவகங்கை,தூத்துக் குடி,திருநெல்வேலி,விருதுநகர், தென்காசி,கன்னியாகுமரி,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்துரோட்டரி சங்க உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கருத்தரங்கு செயலாளர் முத்து செல்வன் நன்றி கூறினார்.