காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் : முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து

Loading

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், சென்னையில்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.நியூசிலாந்து நாட்டின் தலைநகர் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற, தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தை சேர்ந்த 13 வீர, வீராங்கனைகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில், டி.ஆர்.பாலு எம்.பி., விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா,
மாநில வலுதூக்கும் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாகராஜன், இணைத்தலைவர் ஹரிதாஸ், செயல் செயலாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply