சிவகங்கை மாவட்டத்தில் வியாழன் கோள் அதன் துணைக்கோள்கள் மக்கள் கண்டுகளிப்பு

Loading

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காளையார்கோவில் கிளையில் வான்நோக்குதல் நிகழ்ச்சி காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர் கோயில் அருகில் உள்ள வளாகத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கிளைத் தலைவர் வீரபாண்டி, கௌரவத் தலைவர் நாகலிங்கம் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ஆரோக்கிய ஜெய சாலமன் வரவேற்புரை ஆற்றினார். காளையார்கோவில் கிளை இந்திய செஞ்சிலுவை சங்க சேர்மன் தெய்வீக சேவியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வான்நோக்குதல் நிகழ்வை தொடங்கி வைத்தார். கிளை இணைச் செயலாளர் முத்துக்குமார் வான்நோக்குதல் நிகழ்வுகள் குறித்து எடுத்துக் கூறினார். பொறியாளர் சசிகுமார் இரண்டு தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வானில் உள்ள வியாழன் கோளினைச் சுற்றி துணைகோள்கள் உள்ளதை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். ஆசிரியர் டேவிட் நன்றி கூறினார். குடும்பம் குடும்பமாக வருகை தந்தும் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளும் வானில் உள்ள வியாழன் கோளினையும் துணைக்கோள்களையும் கண்டு ரசித்தனர். வான் நோக்குதல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் செல்வம், ஆசிரியர்கள் சுரேஷ், ராமநாதன் காளையார்கோவில் கிளை வர்த்தக சங்க செயலாளர் சதீஷ்குமார், அரசு போக்குவரத்து துறை ஓட்டுனர் மலைச்சாமி, சுற்றுலா பயணி சரவணன் ஆகியோர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார்கள்.
0Shares

Leave a Reply