மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (09.01.2023) நடைபெற்றது.இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.முன்னதாக, மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு அதற்கான விவரங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவித்திட அறிவுறுத்தினார். தொடர்ந்து, 6 காது கேளாத பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15,000 மதிப்புள்ள பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகள் எனும் ஸ்மார்ட் போன்கள்ரூ.90,000மதிப்பில்மாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்வழங்கினார்.இன்றுநடைபெற்றமக்கள்குறைதீர்க்கும்நாள்கூட்டத்தில்மாற்றுத்திறனாளிகளிடம் 21 மனுக்களும், பொது மக்களிடம் 519 மனுக்களும் பெறப்பட்டன.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.டி.சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திரு.க.கவியரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ஆர்.விஜயராகவன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.க.சுப்ரமணி, அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.