அரசு கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:
அரசு கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:அரசு பள்ளிகளில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் பாடங்களில், 10ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டு,10 ஆண்டை கடந்து பணி செய்து வருகிறார்கள்.முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் அறிவித்தார்.விடியல் தர போறாரு ஸ்டாலின் என்று திமுக நடத்திய உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய போதும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிரந்தரம் செய்வதாக அறிவித்தார்.தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்ததை செயல்படுத்த, சட்டசபையில் அரசு கொள்கை முடிவு எடுத்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்எஸ்.செந்தில்குமார் கூறியது:பணி நிரந்தரம் செய்து விட்டால் பொங்கல் போனஸ், சம்பள உயர்வு அனைத்தும் அவ்வப்போது கிடைக்கும்பொங்கல் போனஸ், சம்பள உயர்வு போன்றவை கூட கிடைக்காமல் பகுதிநேர ஆசிரியர்கள் தவிக்கின்றோம்.பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை எங்கள் கோரிக்கை அனைத்தும் முதல்வர் ஆணையிட்டால் மட்டுமே அவை செயல்பாட்டுக்கு வரும் நிலையில் தான் உள்ளது.பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய திமுக 10 ஆண்டாக சட்டசபையில் குரல் கொடுத்தது.அப்போது போராட்டதிலும் திமுக கலந்து கொண்டு ஆதரித்து குரல் கொடுத்தது.இப்போது திமுக அதனை நிறைவேற்றும் இடத்தில் ஆட்சியில் உள்ளது.தமிழ்நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும், முன்பு திமுக வைத்த அதே கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.சட்டசபையிலும் அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என 6 கட்சிகளும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளது.எனவே, சட்டசபையில் அரசு கொள்கை முடிவு எடுத்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.