அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் அமைந்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் சிலர் மலத்தை கலந்த சம்பவம் இந்த நாட்டையே உலுக்கியது இந்த கீழ் தரமான செயல்களை அரசு மெத்தன போக்கை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ கு தமிழரசன் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் சமூக நீதியின் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் அம்பேத்கர் தாசன் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றம் தலைவர் பி பீ சுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் பேரவையின் பொதுச் செயலாளர் அன்பு தாஸ் உள்ளிட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகமுத்து அவர்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அநீதி நடைபெற்று வருவதாகவும் மேலும் குடிநீரில் மலத்தை கலப்பது எந்த நாட்டிலும் எந்த மாநிலத்திலும் இது போன்ற நிகழ்வு நடக்கவில்லை என்றும் ஆனால் தமிழகத்தில் இந்த கொடும் செயல் நடந்திருப்பது ஒரு கேவலமற்ற இந்த செயலை செய்தவர்களை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். மேலும் தீண்டாமை ஒழிப்பு பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் அதற்கு இதுவரை எந்த தீர்வும் மத்திய மாநில அரசு எடுக்கவில்லை என்றும் கூறினார் மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மீண்டும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார் மேலும் அரசு மீண்டும் மெத்தினை போக்கை கடைபிடிக்கும் என்றால் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.