அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா (AMPi) – புதிய அரசியல் கட்சி உதயம்

Loading

அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் நிறுவனர், .கவுதம் சாகர் மஹாயான் ஆவார். நாட்டிலுள்ள இளைஞர்களை வலுப்படுத்துவதே அவரது குறிக்கோள் ஆகும்.  இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த நவம்பர் 11, 2021 அன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும். .கவுதம் பேசுகையில், “மற்ற கட்சிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட கட்சியாக எங்களது  கட்சி இருக்கும். உண்மையிலேயே திறமையுள்ளவர்களை வெளியே கொண்டுவந்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம். மேலும் அவர் பேசுகையில், “எங்களது கட்சி, எட்டு அம்சக் கொள்கைகளைக் கொண்டுள்ளது. சரியான புரிதல்/பார்வை, சரியான நோக்கம்/மனோபாவம், சரியான மன நிறைவு, சரியான பேச்சு, சரியான வாழ்வாதாரம், சரியான குழு, சரியான முயற்சி/செயல்பாடு மற்றும் கூட்டுறவு ஆகியவை அவை. தகுதி, ஆரோக்கியமான உரையாடல், சிக்கனம், பொருளாதார ஜனநாயகம் ஆகியவற்றில் நாங்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இக்கட்சி,  அதே கருத்தியலை (ideology) தனது தேர்தல் அறிக்கையிலும் கொண்டுள்ளது. திறம்வாய்ந்த ஆற்றல் பயன்பாடு, எல்லாவற்றையும் உள்ளடக்கிய கல்வி, நீர் நிர்வாகம், நிலத்தடிநீர் சேமிப்பு, நிலத்தை அதிகபட்ச பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், சிறப்பான கழிவு மேலாண்மை, கூட்டுறவு இயக்கத்தை மீட்டுருவாக்கம் செய்தல் ஆகிய முக்கியக் கொள்கைகளை இக்கட்சி தன்னகத்தே கொண்டுள்ளது”, என்றார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *