பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டனார் ஆர்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் சங்க நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் இராஜேந்திரன் அவர்களிள் ஆணைக்கிணங்க பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசி இழிவு படுத்திய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ப.உதயன் தலைமையில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தினமகிழ் இளங்கோவன் ,தினபார்வை ரெத்திஸ்,தினச்சூரியன் கோபால், அரசியல் கடிவாளம் பிரகதீஷ் ,ஹியூமன் ரைட்ஸ் டுடே செய்தியாளர்கள், முத்துச்சாமி, ராஜன், தினகாற்று முருகேசன், தமிழகநீயூஸ் மணிவேல், தினசெய்தி, ஈஸ்வரன்,பகுஜன்குரல் ஆர்ஆர்.ரமேஷ், மதுரை மினிட்ஸ் நாகராஜ், சமூக ஆர்வலர்கள் எஸ்.ஆர்.எஸ் சரவணன், ரெங்கசாமி, யாசிர், மற்றும்அனைத்து செய்தியாளர்கள் , ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் முழக்கமிட்டனர் . ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து செய்தியாளர்களுக்கும் மற்றும்சமூக ஆர்வலர்களுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஒட்டன்சத்திரகாவல்துணைகண்காணிப்பாளர்முருகேசன்,காவல்ஆய்வாளர்ராஜசேகரன்,சார்புஆய்வாளர்கள்,பாலகுமாரசாமி,கௌசல்யா, காவல்துறை பத்திரிகை துறை சார்ந்த நண்பர்களுக்கு இறுதியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
One attachment • Scanned by Gmail