ட்ரோன் கேமரா பறிமுதல் செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை.
உரிய அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட அண்ணாமலையார் மலையின் மீது சென்று ட்ரோன் கேமராவின் மூலம் திருவண்ணாமலை நகரம் கோயில் உட்பட்ட பகுதிகளை படம் பிடித்த நபரிடம் ட்ரோன் கேமரா பறிமுதல் செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை.திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலைக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.இந்நிலையில் சுமார் 150 அடி உயரத்தில் கந்தாஸ்ரமத்திற்கு மேல் வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதியில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சார்ஜி என்பவர் ட்ரோன் கேமராவை பறக்க விட்டுள்ளார்.ட்ரோன் கேமரா பறக்க விடுவதற்கு வனத்துறை மற்றும் காவல் துறையினரிடம் அனுமதி பெறாமல் அண்ணாமலையார் மலை மற்றும் அண்ணாமலையார் திருக்கோவில், திருவண்ணாமலை நகரை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.மலையில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இது குறித்து வனச்சரக அலுவலர் சீனிவாசன் அவர்களுக்கு தகவல் அளித்ததின் பேரில் சீனிவாசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் சார்ஜியை கையும் களவுமாக பிடித்து திருவண்ணாமலை மாவட்ட வனச்சாரக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டார்.ரஷ்ய நாட்டுச் சேர்ந்தவர் என்றும் அந்த நபரின் பாஸ்போர்ட் குறித்த விவரங்களையும் அவர் எந்த பகுதியில் தங்கியுள்ளார் திருவண்ணாமலையில் தங்குவது குறித்து காவல்துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதா என்றும் மேலும் அவரோடு மலைக்கு எத்தனை பேர் சென்றனர் எந்தெந்த இடங்களை புகைப்படம் எடுத்து இருக்கிறார்கள் வேறு யாருக்கேனும் அந்த புகைப்படங்களை பரிமாறி இருக்கிறாரா என்று பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு ரஷ்ய நாட்டை சேர்ந்த செர்ஜி என்பவருக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்தும் எச்சரிக்கை செய்து ட்ரோன் கேமராவையும் விடுவிக்கப்பட்டது மேலும் காவல்துறை மற்றும் வனத்துறையில் தீவிர விசாரணையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சர்ஜி சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்துள்ளது மேலும் சர்ச்சியின் உறவினர் ஒருவர் ஒருவர் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடும் பணி தீவிரமாக முடக்கிவிடப்பட்டுள்ளது முறையான சி பார்ம் இல்லாமல் அவர்களை தங்க வைத்ததற்காக வீட்டின் உரிமையாளரிடம் காவல்துறையினர் தீவிரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது