சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் பாதுகாப்பு பணியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் பாதுகாப்பு பணியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் அவர்களின் மேற்பார்வையில், கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. S. அசோக்குமார் அவர்களின் தலைமையில், 2 உதவி காவல் கண்காணிப்பாளர்கள், 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 24 காவல் ஆய்வாளர்கள், 112 உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள். ஆயுதப்படை காவலர்கள் தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் முக்கியமான 10 இடங்களில் உயர்கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொண்டும், தேர்திருவிழா, தரிசனம் காண வரும் பெண் பக்தர்களின் நகைகளை பாதுகாக்கும் பொருட்டு பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மூலம் ஊக்கு (Safety Pin) அணிவித்தும் குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களை பிடித்து FRS செயலி மூலம் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் (BDDS Team) மெட்டல் டிடெட்டர் உபகரணங்கள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவின்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போகும் வயதான முதியோர்கள் மற்றும் குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டி தனியாக போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.