கிணற்றில் விழுந்த கன்று குட்டியை காப்பாற்ற சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு. கன்று குட்டி உயிருடன் மீட்பு*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூங்கிலேரி கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் என்பவர் சொந்தமான மூன்று கால்நடைகளை வைத்து பராமரித்து வரும் நிலையில் அவருக்கு சொந்தமான ஒரு கன்று குட்டி தனது சொந்த விவசாய கிணற்றில் எதிர்பாராமல் விழுந்ததை அடுத்து நாகராஜ் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து அவருடன் சேர்ந்து அவரது நண்பர்கள் ஆன சிவக்குமார், மகேந்திரன், கிருஷ்ணன் ஆகிய நால்வரும் கிணற்றுக்குள் குதித்துள்ளனர்.அது சமயம் நாகராஜின் நண்பர்களான சிவகுமார், மகேந்திரன் ,கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு எடுத்துள்ளனர்.
அதன்பின் நீண்ட நேரம் ஆகியும் நாகராஜை காணாமல் தேடிப் பார்த்துள்ளனர் இதனை அடுத்து ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ஊத்தங்கரை தீயணைப்பு படையினர் காணாமல் போன நாகராஜின் உடலை தேடி கிணற்றில் இறங்கி தேடிய பொழுது நாகராஜ் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார் .அவரது உடலை கைப்பற்றிய ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மூங்கிலேரி கிராமத்தில் கன்றுக்குட்டி காப்பாற்ற சென்ற நபர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.