புத்தாண்டு ஆசீர்வாதக் கூட்டத்தில் பெருந்திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Loading

சென்னையில் இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு ஆசீர்வாதக் கூட்டத்தில் பெருந்திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று சென்னையில் இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் டாக்டர் பால். தினகரன் புத்தாண்டு ஆசிர்வாதக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். இந்த ஆண்டுக்கான புத்தாண்டு ஆசிர்வாதக் கூட்டம்  சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் டாக்டர் பால். தினகரன் தலைமையில் நடைபெற்ற 2023ம்  ஆண்டு புத்தாண்டு ஆசீர்வாத கூட்டத்தில் ,கிறிஸ்தவ மத போதகர்கள், திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கூடிய கிறிஸ்தவ பெருமக்கள் முன்னிலையில் புத்தாண்டை கொண்டாடும் வகையில் 20 அடி நிலம் கொண்ட சிறப்பு கேக்வெட்டி,அனைவருக்கும்பகிர்ந்தளிக்கப்பட்டது. சுமார் ஐந்து ஆயிரதிற்கு  அதிகமான கிறிஸ்தவர்கள் திரண்ட இக்கூட்டத்தில் Dr. பால் தினகரன் மற்றும் குடும்பத்தினர் தேவ செய்தியளித்து பிரார்த்தனை செய்தனர். இதில், அவரது மகன் சாமுவேல், மருமகள் டாக்டர் ஷில்பா, தாயார் ஸ்டெல்லா, மனைவி இவாஞ்சலின் ஆகியோரும் கலந்து கொண்டனர். பேராயர்கள்,போதகர்கள் உள்ளிட்ட அனைத்து திருச்சபை தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply