தவறான சிகிச்சை அளித்து கண் இழந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

Loading

தவறான சிகிச்சை அளித்து கண் இழந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டம்சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் சின்னனூர் கிராமத்தை சேர்ந்த சத்யா என்பவர் கடந்த 31 அக்டோபர் மாதம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக உள்நோயாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது இதனிடையே சிகிச்சையில் ஊசி செலுத்தினர் இந்த நிலையில்  சந்தியாவிற்கு கண் வீக்கம் ஏற்பட்டது இது குறித்து மருத்துவர்கள் கேட்ட நிலையில் சரிவர பதில் அளிக்காததால் அரசு மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வலது கண்ணில் பார்வை பறிபோனது என மருத்துவர்கள் தெரிவித்தனர்இதனால் அதிர்ச்சடைந்த உறவினர்கள் இது குறித்து அரசு மருத்துவமனையில் புகார் தெரிவித்தனர் ஆனால் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்  நடவடிக்கை இல்லாததால்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தவறான சிகிச்சையால் கண்ணை இழந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்றனர் அப்போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனை தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில்  ஈடுபட்ட போராட்டக்காரர்கள் திடீரென அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்  மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்தும் தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர் அப்போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் பரபரப்பு நிலவியது இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *