வங்கிகளிலும், பேருந்துகளிலும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
இந்திய அரசின் உத்தரவுப்படி இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை அச்சடித்து வெளியிட்டு வருகிறது. இத்தகைய 10 ரூபாய் நாணங்கள் செல்லுமா என்ற சந்தேகம் அவ்வப்போது சில பகுதிகளில் எழுப்பப்படுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நாணயங்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுவதாகவும் தனிநபர் மற்றும் கடை உரிமையாளர்கள் சிலர் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடும் 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லத்தக்கவையாகும்.இந்த நாணயங்கள் நமது நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வியல் கோட்பாடுகளைச் சித்தரிக்கும் வகையில் வெவ்வேறு உருவப்படங்களுடன் அவ்வப்போதுவெளியிடப்படுகின்றன. இந்திய அரசின் உத்தரவுப்படி இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை அச்சடித்து வெளியிட்டு வருகிறதுரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட நாட்களுக்குப் புழக்கத்தில் இருக்கும் என்பதால் இந்திய ரிசர்வ் வங்கி இதுவரையில் 14 வெவ்வேறு விதமான உருவப்படங்களுடன்10ரூபாய்நாணயங்களவெளியிட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஜனவரி 17, 2018 தேதியிட்ட சுற்றறிக்கை தெளிவு படுத்துகிறது. இவை அனைத்தும் செல்லத்தக்கவையே. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 20, 2016 தேதியிட்ட பத்திரிக்கைச் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர், தமது ஜூன் 26, 2019 தேதியிட்ட பத்திரிக்கைச் செய்தி எண். 2018-2019/3056-ல் இதே கருத்துக்களை வலியுறுத்தி இந்த நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவை என்றும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வதந்திகளை நம்வேண்டாமென்றும் தொடர்ந்து அனைவரும் 10 ரூபாய் நாணயங்களைத் தயக்கமில்லாமல் பயன்படுத்த வேண்டும்.இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தமது எல்லாக் கிளைகளிலும் 10 ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்ளவும், பரிவர்த்தனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை. வங்கிகளிலும், பேருந்துகளிலும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் தயக்கமில்லாமல் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.