சிறப்பாக” செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு , பரிசு ஈரோடு எஸ்.பி., வழங்கினார்.!

Loading

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் எஸ் பி சசிமோகன் தலைமை யேற்று சிறப்பித்தார்.ஈரோடு மாவட்டத்தில் 2022 சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் அதிகாரிகள் ,காவலர்கள் அவர்களது பணி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ,கேடயம் மற்றும் வெகுமதியை ஈரோடு எஸ்.பி., யிடம் நேரடியாக பாராட்டு பெற்றனர்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, ஈரோடு, சூரம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய விசாரணை திறன்பட மேற்கொண்டதற்காகவும்,கஞ்சா ,லாட்டரி வழக்கு பதிந்து தண்டனை பெற்று தந்தது மற்றும் நீதிமன்ற நிலுவை வழக்குகள் அதிகபட்ச தண்டனை பெற்று தந்ததற்காக கடத்தூர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு பாராட்டப்பட்டது, நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குப் கோப்புக்கு. எடுக்க, நீதிமன்ற நடவடிக்கையை துரித படுத்துவதற்காக கடத்தூர், பவானி காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன, நீதிமன்ற அழைப்புகளுக்கு சார்வு செய்தமைக்காக அரச்சலூர் காவல் நிலையமும், பிடிவாரண்டுகளை அதிக அளவில் நிறைவேற்றியதற்காக வீரப்பன்சத்திரம் காவல் நிலையமும் ,குற்ற வழக்குகளில் அதிக குற்றவாளிகளை கைது செய்ததுமைக்காகவும் , மேலும் சொத்துக்களை மீட்டதற்கு ஈரோடு நகர குற்றப்பிரிவு ,வீரப்பன்சத்திரம், பெருந்துறை சித்தோடு ,கோபி ,கவுந்தப்பாடி ஆகிய காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டது, மேலும் விபத்து வழக்குகளில் அதிக வழக்குகளில் புலன் விசாரணை முடித்து, வழக்கு ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ததற்கு பவானி காவல் நிலையம் மற்றும் குடும்ப வழக்கில் சிறப்பாக செயல்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பெருந்துறை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பாக செயலாற்றிய ஆய்வாளர்கள் .., மசூதா பேகம், முருகையன் ,கோமதி, சோமசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் , முதல் நிலை காவலர்கள் மற்றும் காவலர்கள் பாராற்றப்பட்டு ,பண வெகுமதி, கேடயம் ஆகியவை பரிசாக நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
0Shares

Leave a Reply