ரேசன் கடைகள், ஊராட்சி அலுவலகம் திறப்புவிழா உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு
ஒட்டன்சத்திரம் தொகுதி, தொப்பம்பட்டி ஒன்றியத்தில்ரேசன் கடைகள், ஊராட்சி அலுவலகம் திறப்புவிழா
உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஒன்றியம் சரவணம்பட்டி, சந்தன்செட்டிவலசு, மிடாப்பாடி, புஷ்பத்தூர் ஆகிய பகுதிகளில் ரேசன்கடைகள், ஊராட்சி மன்ற கட்டிடம், தரைமட்ட நீர்தேக்க தொட்டி, சமுதாய கூடம், தானிய கிட்டங்கி திறப்பு விழா நடைபெற்றது. மேலும் சாலை மேம்பாட்டுபணிகள், மருத்துவ பணியாளர்கள் குடியிருப்புகள் மற்றும் சுற்றுச்சுவர், வைப்பறை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினார். இதில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கா.பொன்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய பெருந்தலைவர் சத்யபுவனா, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு வங்கி நிர்வாகிகள், பொதுமக்கள்
திரளானோர் கலந்துகொண்டனர்.