கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.71 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.71 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு, ஆய்வுகன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்டஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் :-கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கீழ். இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கனியாகுளம் ஊராட்சியில் அழகன்கோணம் இசக்கியம்மன் சாலையில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49 இலட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பணியினை பார்வையிட்டதோடு. பறக்கை ஊராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவ வளாகத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாய கிட்டங்கி கட்டிடத்தினை பார்வையிடப்பட்டது.மேலும், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல்வாய்மொழிதானுமாலையான்புதூரிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாநில திட்டத்தின் கீழ் ரூ.46 இலட்சம் செலவில் கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு. மாதவலாயம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினையும், வெள்ளமடம் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.5.65 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் அரசுதொடக்கப்பள்ளியில்பழுதடைந்தசமையலறைகட்டிடத்தினைபார்வையிடப்பட்டது.அதனைத்தொடர்ந்து, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்கப்பள்ளியில் மாநிலதிட்டத்தின்கீழ்ரூ.68.70இலட்சம்மதிப்பில்கூடுதலாகநான்குவகுப்பறைகள்கட்டுவதற்கானஇடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, வல்லன்குமாரவிளை அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.98.55 இலட்சம் மதிப்பில் கூடுதலாக ஆறு வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தினையும், இளங்கடை வடக்கு அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.68.70 இலட்சம் மதிப்பில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு. பணியினை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிநகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.57 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டிருந்த பணிகள் என மொத்தம் கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, அனைத்து வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு செய்தியாளர்கள் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.இப்பயணத்தின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பி.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி.எம்.ஆர்.வாணி, செயற்பொறியாளர் திருமதி.ஏழிசை செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.