டைரக்டராக பயிற்சி எடுக்கிறேன் -ராதிகா ஆப்தே

Loading

டைரக்டராக பயிற்சி எடுக்கிறேன் -ராதிகா ஆப்தே
முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராதிகா ஆப்தேவும் படம் இயக்க வருகிறார். கதாநாயகிகள் பலர் படம் டைரக்டு செய்ய வந்துள்ளனர். ரேவதி, கங்கனா ரணாவத், நந்திதா தாஸ், ஹேமமாலினி, பூஜா பட் உள்ளிட்ட நடிகைகள் டைரக்டர்களாக மாறி உள்ளனர். இந்த நிலையில் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி, கார்த்தி ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராதிகா ஆப்தேவும் படம் இயக்க வருகிறார். இதற்காக நடிப்புக்கு முழுக்கு போட போகிறார் என்றும் தகவல் பரவியது. இதுகுறித்து ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், இயக்குனராக வேண்டும் என முதலில் இருந்தே எனக்கு ஆசை உள்ளது. ஆனால் எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். அதுமட்டுமின்றி நான் ஏற்கனவே இயக்குனர் பிரிவில் பயிற்சியும் பெற்றிருக்கிறேன்.
விரைவில் ஒரு படத்தை இயக்க போகிறேன். ஆனால் அதற்கு முன்பு திரைக்கதை பற்றி இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக சில இயக்குனர்களிடம் பணியாற்றி பயிற்சி பெற முடிவு செய்திருக்கிறே

0Shares

Leave a Reply