மகன் கண்முன்னே கத்தியால் வெட்டி கொன்றகொடூரம்

Loading

திருவள்ளூர் டிச 31 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கீழவணம் கிராமத்தில் வசிப்பவர் பாஸ்கர்.  இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாளராக பணியாற்றி வந்தார்.  மேலும் இவர் கராத்தே மாஸ்டராகவும் இருந்தார். இந்நிலையில் இன்று காலை பாஸ்கர்  தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள தென்னை மரத்தில் இவரது பக்கத்து நிலத்துக்கு சொந்தக்காரரும் உறவினருமான சந்திரன் மற்றும் அவரது மனைவி ஜோதி  ஆகியோர் பாஸ்கர் நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறித்துள்ளனர்.இதனை கராத்தே மாஸ்டர் பாஸ்கர் தட்டிக் கேட்டு உள்ளார். இதனை பாஸ்கர் அருகில் இருந்து அவரது மகன் ஆகாஷ் அவர்கள் இளநீர் பறிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தென்னை மரத்தில் இளநீர் பறித்துக் கொண்டிருந்த சந்திரன் இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து வந்து பாஸ்கர் மகன் ஆகாஷ் கண் முன்னே பாஸ்கரை நெஞ்சு பகுதியில் ஒரே வெட்டாக வெட்டி சாய்த்தார், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாஸ்கர் மயங்கி விழுந்தார்.  வீடியோ எடுத்த சிறுவனையும் சந்திரன் வெட்டுவதற்காக துரத்தியுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த கராத்தே மாஸ்டர் பாஸ்கரை அவரது உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இளநீர் வெட்டிய நபரை தடுத்த குற்றத்திற்காக கராத்தே மாஸ்டர் பாஸ்கரை மகன் ஆகாஷ் கண் முன்னே வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *