பொது சுகாதார துறையில் பணி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Loading

திருவள்ளூர் டிச 31 : திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதார துறையில் பணி நியமனத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை மற்றும் தேசிய நலக்குழுமம் மாவட்ட நலச்சங்கம் மூலமாக தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பகுதி சுகாதார செவிலியர்,நகர்புற சுகாதார மேலாளர் -5 கணக்கு உதவியாளர் -2, விவரத் தொகுப்பாளர் -1, நகர்ப்புற சுகாதார செவிலியர் – 8, மருந்தாளர்1, பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் -2, பல் மருத்துவ உதவியாளர் -4,லிம்ஸ் ஜடி ஒருங்கிணைப்பாளர் -1 ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான விண்ணப் படிவமானது https//tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சுய சான்றெப்பமிட்ட சான்றிதழ்களை நகல்களுடன் 09.01.2023 அன்று மாலை 5 மணிக்குள் நிர்வாக செயலாளர் மாவட்ட நலவாழ்வு சங்கம் ,துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் திருவள்ளூர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறும், அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளபடமாட்டாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
0Shares

Leave a Reply