மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்கள்.

Loading

பண்ருட்டி அடுத்த அரசு மேல்நிலைப்பள்ளியில்நடந்தநிகழ்ச்சியில்தொழிலாளர்நலன்மற்றும்திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன்16வது வாய்ப்பாடு மனப்பாடமாக படித்து அசத்தினார்.பண்ருட்டி டிச. 31- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் மாணவ மாணவிகளுக்குஅண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் ஏற்பாட்டில்ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் மாணவ மாணவிகளுக்கு  விளையாட்டு உபகரணங்கள்வழங்கும் நிகழ்ச்சிக்கு  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பேசும்போதுபள்ளி மாணவ மாணவிகளிடம் தனது பள்ளி பருவ காலங்களில்  அனுபவத்தை கூறினார்.இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் வாய்ப்பாடு 1வது வாய்ப்பாடு முதல் 16 வது வாய்ப்பாடு வரை மனப்பாடமாக இருக்க வேண்டும் என்று கூறினார்இதை நம்பும் வகையில் மேடையில்  16வது வாய்ப்பாடு மனப்பாடமாக படித்தார்.இந்நிகழ்வு அங்கிருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சிரியத்துடன்  பார்த்தனர். மேலும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்கள்.  துப்புரவு பணியாளர்களுக்கு சேலை போர்வைகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள். கிளை கழக நிர்வாகிகள். திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *