வினாடிக்கு 200 கன அடியிலிருந்து 500 கன அடி வீதம் உயர்த்தி உபரி நீர் வெளியேற்றம்

Loading

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.  ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி.   இன்றைய நிலவரப்படி 35 அடி உயரமும் 3231 மில்லியன் கன அடி நீராக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் பூண்டி ஏரிக்கு மழை நீர், வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர், கேசாவரம் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு அதன் மூலம் பெறப்படும் நீர் 700 கன அடியும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நதி நீர்  500 கன அடி என மொத்தம் 1200 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே 200 கன அடி வீதம் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டு சென்று கொண்டிருந்த நீரானது தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 500 அடியாக உயர்த்தி உபரிநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.மேலும்புழல்மற்றும்செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக 450 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்திற்காக பேபி கால்வாய் வழியாக 38 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.அதேபோல் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இன்றைய நிலவரப்படி 2918 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 303 கன அடி‌ நீர் வந்து கொண்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 187 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. இன்றைய நிலவரப்படி 831 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 15 கன‌ அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. இன்றைய நிலவரப்படி 3259  மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதில் மழை நீர், வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர்  என 246 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 130 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  கண்ணன்கோட்டை மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. இன்றைய நிலவரப்படி 488 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *