ரூ.149.24 கோடி மதிப்பீட்டில் வங்கிக்கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமானத்தை ஈட்டி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக திருவள்ளுர் நகராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஊரகப் பகுதியில் 1,115 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 13,380 உறுப்பினர்களுக்கு ரூ.89.97 கோடி மதிப்பீட்டில் குழு வங்கி கடன்களும், 61 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சேர்ந்த 3,477 பயனாளிகளுக்கு ரூ.32 கோடி மதிப்பீட்டில் வங்கி பெருங்கடன்களும், நகர்ப்புற சுய வேலைவாய்ப்பு திட்டம் சார்பாக 231 குழுக்களைச் சார்ந்த 2,772 பயனாளிகளுக்கு ரூ.21.75 கோடியும், சமுதாய முதலீட்டு நிதியாக 335 பயனாளிகளுக்கு ரூ.5.02 கோடியும் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பைச் சேர்ந்த 2 உறுப்பினர்களுக்கு ஆதார நிதியாக ரூ.50,000-ம் கடன் உதவியும் என மொத்தம் 1407 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 19,966 உறுப்பினர்களுக்கு ரூ.149.24 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வங்கி கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படபால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கினார்.மேலும், இவ்விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஒரு மகளிர் சுய உதவி குழு உறுப்பினருக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழையும், திறன் வளர்ப்பு பயிற்சி நிறைவு செய்த ஒரு மகளிர் சுய உதவி குழு உறுப்பினருக்கு வேலை வாய்ப்பு உத்தரவு ஆணையையும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்ட சிறப்பு கண்காட்சி அரங்குகளை பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பார்வையிட்டார்.முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சிராப்பள்ளியில் மாநில அளவில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள், மணிமேகலை விருதுகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்வுகளை நேரலையில் திருவள்ளுர் நகராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் தொலைக்காட்சி வாயிலாக மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டனர்.இதில் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), க.கணபதி (மதுரவாயல்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, வளர்ச்சி கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான செ.ஆ.ரிஷப்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் கோ.மலர்விழி,திருவள்ளூர் நகராட்சி தலைவர் உதய மலர் பாண்டியன், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், உள்ளாட்சி பிரதிநிதிகள், வங்கியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.