இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

Loading

திண்டுக்கல் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்  கடந்த 6 காலாண்டுகளில் 1,887 நபர்களுக்கு ரூ.1,06,48,500 மற்றும் 193 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23,99,250 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பினை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் எண்ணற்ற வேலை வாய்ப்பு சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகள் ,உயர்கல்வி  பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் . பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும்  இளைஞர்களுக்கான  திறன் மேம்பாட்டு திட்டமான ‘ நான் முதல்வன் ‘ என்ற புதிய திட்டத்தைசெயல்படுத்தி வருகிறார்கள் . தமிழகத்தில் ஆண்டுக்கு  10 லட்சம் பேரைவேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்செயல் பட்டு வருகிறார்.எதிர்காலத்தில் எந்தத் துறையில் படிக்க வேண்டும்என்பதை பள்ளியில் படிக்கும் போதேதங்களை தயார்படுத்திக் கொண்டு,குறிக்கோளுடன்படிக்க வேண்டும் என்பதற்காக 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள், தொடர் வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு2006ம் ஆண்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தினைதொடங்கி வைத்தார்கள்.அதன் அடிப்படையில்இத்திட்டத்தின் கீழ் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவேலை வாய்ப்புக்காககாத்திருப்போருக்கு 3 ஆண்டுகளுக்கும் மாற்றுத்திறனாளி எனில் குறைந்தபட்சம் ஒரு  வருடம் நிறைவு செய்திருந்தால் 10 ஆண்டுகளுக்கும் அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.வேலைவாய்ப்பற்றோருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் காலாண்டுஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி கல்வி தகுதியை பதிவுசெய்தவர்களுக்கு ரூ் 600 ,பத்தாம் வகுப்பு தேர்ச்சி இணை பதிவு செய்தவர்களுக்கு ரூ,900,  12 ஆம் வகுப்பு தேர்ச்சியினை பதிவு செய்தவர்களுக்கு ரூ். 1,200 பட்டம் மற்றும் முதுகலை பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ. 1,800மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழானதகுதி வரை பதிவு செய்தவர்களுக்குகாலாண்டுஒன்றுக்கு ரூ .1,800 பனிரெண்டாம் வகுப்பு கல்விதகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.2,250பட்டம் மற்றும் முதுகலை பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ, 3,000 என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்தலைமையிலான அரசு வழங்கிஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் ,படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்த 19 நபர்களுக்கு காலாண்டிற்கு(3 மாதங்கள்) தலா ரூ. 600 வீதம்  6 காலாண்டிற்கு  ரூ. 39,000 மதிப்பிலான உதவித்தொகையும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியினைபதிவு செய்த246 நபர்களுக்குகாலாண்டிற்குதலா ரூ. 900 வீதம் 6 காலாண்டிற்கு7,91,100 மதிப்பிலான உதவித்தொகையும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பதிவு செய்த 731 நபர்களுக்கு காலாண்டிற்கு தலா ரூ. 1,200 வீதம் 6 காலாண்டிற்கு ரூ. 34,20,000 மதிப்பிலான உதவித்தொகையும், பட்டம் மற்றும் முதுகலை பட்டம் படித்து பதிவு செய்த 891 நபர்களுக்கு காலாண்டிற்கு தலா ரூ. 1,800 வீதம் 6 காலாண்டிற்கு  ரூ.63,98,400 மதிப்பிலான உதவித்தொகை என கடந்த 6 காலாண்டுகளில் மொத்தம் 1,887 நபர்களுக்கு ரூபாய்1,06,48,500 வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ,10 ஆம் தேர்ச்சி மற்றும் அதற்குக் கீழான  கல்வித்தகுதியினை பதிவு செய்த 39மாற்றுத்திறனாளிகளுக்குகாலாண்டிற்கு தலா ரூ.1,800 வீதம் 6 காலாண்டிற்கு ரூ. 63,98,400 மதிப்பிலான உதவித்தொகை எனக் கடந்த 6 காலாண்டுகளில்மொத்தம் 1887 நபர்களுக்கு ரூ.1,06,48,500 வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதியினை பதிவு செய்த 39 மாற்றுத்திறனாளிகளுக்கு காலாண்டிற்கு தலா ரூ. 1,800 வீதம் 6 காலாண்டிற்கு ரூ.3,42,000/ மதிப்பிலான உதவித்தொகையும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி இணை பதிவு செய்த53 நபர்களுக்குகாலாண்டிற்குதலா ரூ. 2,250 வீதம்6  காலாண்டிற்கு  ரூ. 5,78,250 மதிப்பிலான உதவித்தொகையும் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் படித்து பதிவு செய்த 101 நபர்களுக்கு காலாண்டிற்கு தலா ரூ.3,000 வீதம் 6 காலாண்டிற்கு ரூ.14,79,000 மதிப்பிலான உதவித்தொகை என கடந்த 6 காலாண்டுகளில் மொத்தம் 193 நபர்களுக்கு ரூ. 23,99,250/ மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த இளைஞர்கள் ,இளம் பெண்கள் தாங்கள் பெற்ற பயன்களை அக மகிழ்வோடு தெரிவித்துள்ளனர்.

0Shares

Leave a Reply