கன்னடத்தில் அறிமுகமாகும் கல்யாணி
![]()
இயக்குநர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணி . ‘ஹலோ’ என்ற தெலுங்குப் படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’, சிம்புவின் ‘மாநாடு’ படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வந்து 5 வருடம் ஆகிவிட்டதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை கல்யாணி, கன்னடத்தில் அறிமுகமாகிறார். பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் நடிகர் ராகவேந்திரா ராஜ்குமார். இவர் மகன் யுவ ராஜ்குமார் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் கல்யாணி அவர் ஜோடியாக நடிக்கிறார். இதன் மூலம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த நடிகைகள் பட்டியலில் கல்யாணியும் இணைந்துள்ளார்.

