பிரஷ்க்கு பதிலாக கார்பொம்மை யைக் கொண்டு உருவத்தை வரைந்தார்.
கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டி பிரஷ்க்கு பதிலாக
கார் பொம்மை யாலேயே ஆனந்த் மகேந்திரா படம் வரைந்து ஓவிய ஆசிரியர் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் அவர்கள் அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டி மகேந்திரா நிறுவனர் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கும் விதமாக, பிரஷ்க்கு பதிலாக கார் பொம்மை யைக் கொண்டு ஆனந்த் மகேந்திரா அவர்களின் உருவத்தை வரைந்தார்.நாம் இந்த உலகில் எக்காலத்திலும் சிறந்த அழிவடையதா செல்வமாக காணப்படுவது நாம் கற்கின்ற கல்வி ஆகும். அந்த கல்வி செல்வத்தை நமக்கு ஒழுக்கத்துடன் சேர்ந்தவாறு போதிக்கும் இடமாக பள்ளிகள் காணப்படுகின்றன.தமிநாட்டில் காணப்படும் அணைத்து அரசு பள்ளிகளையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு, அதிலும் கிராமப்புற அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டி மகேந்திரா நிறுவனத்தின் நிறுவனர் திரு. ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கும் விதமாக பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் பிரஷ்க்கு பதிலாக, கார் பொம்மை யைக் கொண்டு நீர்வண்ணத்தில் கார் பொம்மையை தொட்டு குழந்தைகள் கார் பொம்மை வைத்து விளையாடுவது போன்று சிறிய கார்கள் ஓட்டி தீட்டி ஆனந்த் மகேந்திரா அவர்களின் உருவத்தை வரைந்தார்.இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புதுமையான சிந்தனை சிறப்பான ஓவியம் என்று ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களை பாராட்டினார்கள்.