பட்டத்து அரசன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
ஆஷிகா ஆசைகன்னட நடிகையான ஆஷிகா ரங்கநாத், அதர்வா நடித்த ‘பட்டத்து அரசன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்து சித்தார்த்துடன் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: கன்னட சினிமாவில் என் நடிப்பைக் கண்டு, பிற மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் வருகின்றன.
தமிழ், தெலுங்கு படப்பிடிப்புகளில் இருக்கும்போது அங்கு, ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ படங்கள் பற்றி பேசுவதைக் கவனித்திருக்கிறேன்.அது எனக்குப் பெருமையாக இருக்கிறது. கன்னட நடிகைகளான ராஷ்மிகா, லீலா ஆகியோர் மற்ற மொழிகளிலும் நடித்து வருகின்றனர். அதற்காக அவர்கள் உழைப்பை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களைப் பாராட்டுகிறேன். பான் இந்தியா நடிகையாக நானும் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான படங்களில் நடிக்க வேண்டும் என்பதும் என் ஆசை” என்று தெரிவித்துள்ளார்.