கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டு :

Loading

திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கே.பி.எஸ். கிரிக்கெட் அகாடமி விளையாட்டு மைதானத்தில்  கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதற்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.மகாலிங்கம் தலைமை தாங்கினார். பூண்டி ஒன்றிய செயலாளர் டி.கிறிஸ்டி வரவேற்றார். நிர்வாகிகள் டி.மோதிலால், டி.எம் சுகுமார், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், ஒன்றிய கவுன்சிலர் மஞ்சு லிங்கேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த பரிசளிப்பு விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசையும், கோப்பையையும் வழங்கி பாராட்டினார். அதேபோல் மேற்கு மாவட்ட செயலாளரும், திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் இரண்டாம் பரிசு வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி. இ.ஆதிசேஷன், கே.திராவிட பக்தன், வி.சி.ஆர்.குமரன், சி.ஜெயபாரதி, உதயமலர் பாண்டியன், எம்.மிதுன்சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், மோ.ரமேஷ், நகர செயலாளர் சி.சு ரவிச்சந்திரன், களாம்பாக்கம் பன்னீர்செல்வம், ஜி.ரமேஷ், வழக்கறிஞர் ஆர்.ராஜா, நீலாவதி சீனிவாசன், வி.ஜெகதீசன், ஏ.பி.செந்தில்குமார்  டி.மூர்த்தி, வேழவேந்தன், சிவக்குமார், சி.செல்வம், பாபு, ஏழுமலை, முனிகிருஷ்ணன், அப்துல்ரஹீம், லிங்கேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டி.தினகரன், டி.நந்தகுமார் ஆகியோர் நன்றி கூறினர்.

0Shares

Leave a Reply