டாஸ்மார்க் கடை எடுக்கக் கூடாது” ! மது பிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று மனுநீதி நாள் என்பதால் பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வந்தனர். ஈரோடு மாவட்டம் துடுப்பதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்எங்களது பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அப்புறப்படுத்த கூடாது என மனு அளித்தனர் ஏனென்றால் இதற்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு பிரிவினர் டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் தற்போது மது பிரியர்கள் இந்த இடத்தில் உள்ள டாஸ்மார்க் கடை அப்புறப்படுத்த கூடாது என மனு அளித்தது வியப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளதாவது. இந்த டாஸ்மார்க் (கடை எண் 3930) வேறு பகுதிக்கு மாற்றினால் அங்கு நாங்கள் மது அருந்த செல்லும் பொழுது போதையில் போக்குவரத்து பிரச்சனையினால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என மது பிரியர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு வழங்கியுள்ளனர். மதுபான கடையை அரசு இயக்கினாலும் மது பிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.