தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட மக்களின் மனமார்ந்த நன்றி.

Loading

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட மக்களின் மனமார்ந்த நன்றி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு சிறப்பான நலத்திட்டங்கள் மற்றும் உலமாக்களுக்கு மிதிவண்டிகள் போன்ற என்னற்ற திட்டங்களைசெயல்படுத்திவருகிறார்.மேற்படிமக்களின்கல்வி,சமூகம்,பொருளாதாரம்ஆகியவற்றிற்காக பல திட்டங்களின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 சதவீதமஇடஒதுக்கீடானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கு 30 சதவீதமும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதமும், ஆதிதிராவிடருக்கு 18 சதவீதமும் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீட்டு முறை நடைமுறையில் உள்ளது.இது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பள்ளிப்படிப்பு முதல் இளங்கலைப்பட்ட படிப்பு வரைபயிலுமபிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகை, அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்மூன்றாண்டுஇளங்கலைபட்டப்படிப்புபயிலும்பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தணையுமின்றி கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பட்டயபடிப்பு (Diploma/Polytecnic) மற்றும் தொழற்கல்வி படிப்பு (Professional Course) பயில்பவர்களுக்கு குடும்பத்தில் முதல்பட்டய/பட்டதாரியாகவும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாமல் இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.கிராமப்புறங்களிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தவிர்த்து, தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டொன்றுக்கு ஊக்கத்தொகையாக 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிக்கு ரூ.500/- மற்றும் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ரூ.1000/-ம் பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இத்தொகையானது மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக, அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய/மாநிலஅரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 38 விடுதிகள் இயங்கி வருகிறது. இவற்றில் 35 விடுதிகள் பள்ளி விடுதிகளாகவும், 3 கல்லூரி விடுதிகளாகவும் செயல்பட்டு வருகிறது. இவ்விடுதிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்குஒவ்வொரு விடுதிக்கும் 2 தமிழ் நாளிதழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழ் வழங்கப்பபடுகிறது. எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வாழ்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விடுதிகளில் தங்கிப்பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவமாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படுகின்றன.4 ஆம் முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் விடுதி மாணவ/மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படுகின்றன. வண்ணத்தொலைகாட்சி, விளையாட்டு உபகரணங்கள், சுத்தகரிக்கபட்ட குடிநீர், நூலக புத்தகங்கள் மற்றும் இன்வர்ட்டர் கருவி, எவர்சில்வர் தட்டுகள், டம்ளர்கள், பாய் போர்வை மற்றும் ஜமுக்காளம் ஆகியவைகள் வழங்கப்படுகின்றன.ஆண்டு தோறும் 3 கட்டமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு, அரசு நிதியுதவி மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்வகுப்பைச்சார்ந்த11ஆம்வகுப்புபயிலும்மாணவமாணவியர்களுக்குஇலவசமாகமிதிவண்டிகள்வழங்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 10,880 இலவச மிதிவண்டிகள் ரூ.5.52 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு, மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் மற்றும்சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்திட, மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சலவைத்தொழில் புரிபவர்களுக்கு, சுயதொழில் செய்து பொருளாதார நிலையை உயர்த்திடும் பொருட்டு, சலவைப்பெட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலாமாக்களுக்கு214மிதிவண்டிகள்ஒதுக்கீடுசெய்யப்பட்டு,வழங்கப்பட்டது.
வஃக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, வஃக்பு நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதிற்குட்பட்ட உலமாக்களுக்கு புதிய இருசக்கர மோட்டார் வாகனம் வாங்குவதற்கு தமிழக அரசால் வாகனத்தின் விலையில் 50 விழுக்காடு அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவோ அத்தொகையினை மானியமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, அம்மானியம் வழங்கப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள சுந்தர் நகரைச் சேர்ந்த திருமதி.ராஜாத்தி அவர்கள் தெரிவிக்கையில்,எனது கணவர் கூலி வேலை செய்து வருவதால் குடும்பத்தை நடுத்துவதற்கு போதிய வருமானம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நான் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் என்னைப்போல் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது என்பதை அறிந்து, அத்துறையில் சென்று விண்ணப்பித்தேன். வறுமை நிலையில் உள்ள எனக்கு தையல் இயந்திரம் வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம் பெறுகின்ற வருமானம் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய உதவியாக இருக்கும்.’ இத்திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர்அவர்களுக்கும்,மாவட்டநிர்வாகத்திற்கும்எனதுநெஞ்சார்ந்தநன்றியினைதெரிவித்துக்கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள கே.டீ.சி காலனியைச் சேர்ந்த திருமதி.மு.மோகனா அவர்கள் தெரிவிக்கையில்:நான் தையல் பயிற்சிமுடித்திருக்கிறேன். தையல் இயந்திரம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. “இதன் மூலம் தையல் தொழில் செய்து, என் கணவருக்கு உதவியாக குடும்ப வருமானத்தை உயர்த்த பெரும் உதவியாக இருக்கும்.” தையல் இயந்திரம் கிடைப்பதற்கு உதவியாக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குமமாவட்டநிர்வாகத்திற்கும், எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன தொகுப்பு:திரு.சே.ரா.நவீன் பாண்டியன், பி.டெக்., எம்.பி.ஏ., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருமதி. எஸ்.செல்வலெட் சுஷ்மா, பி.காம்., உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), தூத்துக்குடி மாவட்டம்.
0Shares

Leave a Reply