அது போன்ற விஷயங்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை- நயன்தாரா

Loading

அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் கடந்த டிசம்பர் 22 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் புரொமோஷனுக்கா நயன்தாரா பேட்டியளித்திருந்தார். அதில், பேய் நம்பிக்கை இருக்கிறதா என்பது குறித்தான கேள்விக்கு பதிலளித்த நயன்தாரா, ‘அது போன்ற விஷயங்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை என்றாலும் நான் தனியாக இருக்கும்போது பயமாக இருக்கும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் பேய்ப் படங்களின் மிகப்பெரிய ரசிகை. சில வருடங்களுக்கு முன்பாக தனியாக பேய்ப் படங்கள் பார்ப்பது என்னுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. முரண்பாடுகள், மோதல்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்திருக்கும் திகில் கதைகள் எப்போதுமே என் விருப்பத்துக்குரியதாய் இருந்திருக்கிறது’ என்றார். ‘கனெக்ட்’ படத்தின் இந்தி பதிப்பு டிசம்பர் 30,2022 அன்று திரையரங்குகளில் வெளியாகயுள்ளது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *