புத்தக வெளியீட்டு விழாவில் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் புகழாரம் !

Loading

முயற்சியும் உழைப்பும் தன்னம்பிக் கையும் இருந்தால் அனைத்தும் கைகூடி வரும் என்பதற்கு உதாரண புருஷர் அமுதா பாலகிருஷ்ணன்: புத்தக வெளியீட்டு விழாவில் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் புகழாரம் !சென்னை:  அனைத்துக்கும் ஆசைப் படு;  அதே நேரத்தில் அது அதற்கான சீரிய  முயற்சிகளையும் பெரு உழைப் பையும் செலுத்தி தன்னம்பிக்கை யோடு செயல்பட்டால், ஆசைப்பட்டது அனைத்தும் கைகூடிவரும் என்பதற்கு உதாரண புருஷராக இருப்பவர் அமுதா பாலகிருஷ்ணன் ஆவார்.மிகச் சாதாரண தொழிலாளியாக வணிகராக  இருந்து பெரும் தொழில் அதிபராக, கல்வியாளராக, முனைவர் பட்டப் படிப்பாளியாக, 50க்கும் மேற் பட்ட நூல்களின்  படைப்பாளியாக என்றெல்லாம் பன்முகத்தன்மை உடையவராகத் திகழ்கிறார்.  இன்னும் பல சிறப்புகளையும் மேன்மைகளை யும் பெறுவதற்கான தகுதிகளையும் வளர்த்து வருபவர்  என “கவிதை உறவு” ஆசிரியரும், இலக்கிய கலை மாமணியுமான  ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் வாழ்த்துரைத்து பேசினார் .முன்னேற்ற சிந்தனையாளர் முனை வர் அமுதா பாலகிருஷ்ணன் எழுதிய “இலக்கியத்தில் வாழ்வியல் முன் னேற்ற சிந்தனைகள்”  எனும் ஆய்வு நூல் வெளியீட்டு விழா, சென்னை முகப்பேர் அமுதா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாக அரங்கத்தில் டிசம்பர் 23 அன்று நடந்தேறியது . நீதியரசர் எஸ். ராஜேஸ்வரன் தலைமையேற்று நூலை வெளியிட, நூற்படிகளை செவாலியே  டாக்டர் வி.ஜி.சந்தோஷம் மற்றும் இயக்குனர் எஸ். பி. முத்து ராமன் பெற்றுக் கொண்டு வாழ்த்து ரைத்து பேசினர்.புலவர் சு. மதியழகன் அனைவரையும் வரவேற்று பேசினார். கவிதை உறவும் வானதி பதிப்பகம் இணைந்து நிகழ்ச்சியை நடத்தினர். அமுதா பாலகிருஷ்ணனின் முனை வர் பட்ட ஆய்வுக்கு நெறியாளராக, வழிப்படுத்தினராக இருந்த தமிழ்த் துறை தலைவர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் , செம்மொழி இயக்க பேராசிரியர் முனைவர் முகிலை இராச. பாண்டியன் ஆகியோர் நூல் நயம் பாராட்டி பேசினர். இலக்கிய நெறிக்கொள்கையர் எப்போதும் வாழ்வில் உயர்ந்திடுவர். இவர்களால் விருதுகள் பெருமை அடையும் ; அப்படியானவர்தான் அமுதாபாலகிருஷ்ணன். அன்னைத் தமிழால் அனைவரும் இணைந்திடுவோம் ; கன்னித்தமிழ் போல வாழ்வாங்கு வாழ்ந்டுவோம். பொறுமையாக செதுக்கினால் கல் லும் கடவுளர் சிலையாக பூஜிக்கப் படும் அத்தகைய பொறுமையானவ ராக இருந்து பல திறன்களை வளர் த்து மேன்மை அடைந்தவர் இந்த நூலாசிரியர். மிகச் சிறந்த தன்னம்பிக்கை வாழ்வி யல் சிந்தனையாளர். இவரது செயல் பாடுகளே  நூலின் ஆய்வுப்பொரு ளாகி இருக்கிறது. சுய முன்னேற்ற நூல் முன்னோடிகளான அப்துல் ரஹீம், டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி. மெர்வின் உள்ளிட்டவர்களின் கருத் தாக்கங்களை எளிய மொழி நடையில் இந் நூலில் வெளிப்படுத்தி இருக்கிறார். சுறுசுறுப்பான இலக்கிய தேனீயான இவர், அன்பும் அறிவும் ஒருசேர வாய்க் கப்பட்டவர். “முயற்சி திருவினை யாக்கும்” ,  “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை”  எனும் குறளுக்கு இலக்கணமாக இருப்பவர்.வாழ்வியல் முன்னேற்ற சிந்தனைகளை,  முயற்சி களை ஒருங்கே கொண்டிருப்பவராக இருந்து, இந்த  நூலை எழுதிட முழுத் தகுதியும் உடையவராக இருப்பவர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டியாக , தன்னம்பிக்கை வளர்த்தெடுத்திடும் பாடநூலாக பெருமைப்படுத்தப்பட வேண்டிய சிற ப்புடையது இந்த நூல்.புதுமை சிந்தனைகளை வெளிப்படுத் திய இந்நூலாசிரியரை ” புதுமைச் சித்தன் ” என்றே பாராட்டி மகிழலாம். என நூலின் சிறப்பு படிகளை பெற்றுக் கொண்ட புலவர் த. ராமலிங்கம், மெய். ரூஸ்வெல்ட் , முனைவர் பெரியண் ணன் , உதயம் ராம்,  கண்ணன் விக்ர மன் ,வணிகர் சங்கத்தின் சந்திரன் ஜெயபால் , கலைமாமணி ஆவடி குமார் , இலக்கியத் தேனீ தமிழ் இய லன் உள்ளிட்டவர்கள் வாழ்த்தி பேசினர். இலக்கியமாமணி ஏர்வாடி இராதா கிருஷ்ணன் பேசியதாவது : கல்வி நிறுவனங்களை வணிகமாக நடத்தி வருபவர்களுக்கு மத்தியில் வணிக ராக தொழிலதிபதராக இருக்கும் அமுதா பாலகிருஷ்ணன் கல்வி நிறுவனத்தை அனைவருக்குமான தாக  நற்சேவையாக  நடத்தி வருகி றார் .அமுதா மெட்ரிக் பள்ளியை சிறிய நிறு வனமாக இருந்தாலும், சீரிய நல் நிறுவனமாக நெறிப்படுத்தி, வழி நடத்தி வருகிறார். உயர்கல்வியை அளித்திடும் கல்லூரியை நடத்த வேண்டும் என்கிற அவரது பெரும் விருப்பம் கூடிய விரைவில் கைகூடி வரவேண்டும் என அனைவரது  சார்பிலும் வாழ்த்துகிறேன். அனைத்துக்கும் ஆசைப்படு;  அதே நேரத்தில் அது அதற்கான சீரிய முயற்சிகளையும் ,பெரு உழைப்பை யும் செலுத்தி, தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் ஆசைப்பட்டது அனைத் தும் கை வரப்பெறும் என்கிற சொல் லாடலுக்கு பொருத்தமான உதாரண புருஷனாக இருப்பவர் அமுதா பால கிருஷ்ணன்.சீரிய நல்உழைப்பாலும், பெருமுயற்சி யாலும் மிகச் சாதாரண தொழிலாளி யாக, வணிக நிறுவன உதவியாளராக இருந்து, பெரும் தொழில் அதிபராக கல்வியாளராக மேன்மை அடைந்த தோடு , அவ்வப்போது பட்டப்படிப்பை, முதுகலை படிப்பை தொடர்ந்து, தனது வாழ்வியல் முன்னேற்ற சிந்தனை களையே ஆய்வுப் பொருளாக்கி, பேரா சிரியர் வா.மு.சே. ஆண்டவர் வழிகாட் டலில் ,நெறிப்படுத்தலில், சென்னை பல்கலைக்கழகத்தில் நேரடியாக முறைப்படி படித்து, “இலக்கியத்தில் வாழ்வில் முன்னேற்ற சிந்தனைகள்” என்கிற  ஆய்வேடு சமர்ப்பித்து முனை வர் பட்டத்தையும் பெற்று சிறப்பு சேர்த் திருக்கிறார். மேலும் அவ்வப்போது தான் படித்தவ ற்றையெல்லாம் அனுபவப்பட்டதை யெல்லாம் பிறருக்கும் பயன்படும் வகையில் இதுவரையில் 50க்கும் மேற்பட்ட நூல்களாக எழுதி வெளியி ட்டு படைப்பு இலக்கியவாதியாகவும் திகழ்ந்திருக்கிறார் .இவர் எழுதிய சிறுகதை தொகுப்பிலி ருந்து “வரப்பு” எனும் சிறுகதை,சாகித் ய அகடெமி சிறுகதை தொகுப்பு நூலு க்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டு பெற்றுள்ளது. “குருவம்மா” என்கிற இவரது மற்றொரு நூலும் தமிழக அர சின் பரிசுக்கு தேர்வாக இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் இந்த சம யத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று வெளியிடப்பட்ட “இலக்கியத் தில் வாழ்வியல் முன்னேற்ற சிந்த னைகள்” எனும் இவரது முனைவர் பட்ட ஆய்வு நூல் பல்கலைக்கழகத் தின் பாடநூலாக வைக்கப்பட வேண் டிய தகுதி உடையது. மாணவர் சமுதாயம் அமுதா பாலகிரு ஷ்ணனை வாழ்வியல் முன்னேற்றத் துக்கான முன் உதாரண புருஷராக ‘ரோல் மாடலாக’ கொள்ளத்தக்க அளவு சிறப்பும் அதற்கான தகுதியும் மிக்கவராக இருக்கிறார். தன்னம்பிக்கையாலும், முயற்சியா லும் உழைப்பாலும் இறை அருளா லும் மேன்மை உடையவராக திகழ்ந் திருக்க , இவரது குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் ஆதரவும் இவருக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும் தாய், தந்தை, தாரம், பிள்ளைகள் இருப்பர் என்பது இவரது மேன்மை நிலையால்  உணர முடி கிறது .இன்னும் பல சிறப்புகளையும் மேன்மைகளையும் பெற்று இந்த சமு தாயத்திற்கு நன்மைகள் பல செய்து  பேரும் புகழும் பெற்றிட வேண்டும் என அனைவரின் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரியப்படுத்தி அமருகிறேன் என கூட்ட முடிவில் ஏற் புறையாக, வாழ்த்துரையாக, நிறைவு ரையாக ஏர்வாடி ராதாகிருஷ்ணன் பேசினார். நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், பத்தி ரிகையாளர்கள், கவிஞர்கள், படைப் பாளர்கள், கல்வியாளர்கள் என பல ரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *