பள்ளி அக்கச்சிப்பட்டியில் தேசிய கணித தினம் கொண்டாட்டம்.

Loading

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ராமானுஜம் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் க. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் க மணிமேகலை வரவேற்று கணித புதிர்கள் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் ரகமதுல்லா, ஆனந்தராஜ் ஆகியோர் தேசிய கணித   தினம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறியதாவதுஉலகமே போற்றி வியந்து பார்க்கும் கணித மேதை ராமானுஜரின் பிறந்த நாள் இந்தியாவில், தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கணிதத்தில் பின்தங்கியிருந்த இந்தியாவை தலைநிமிரச் செய்து, உலக அளவில் கணித மேம்பாட்டுக்கு வித்திட்டவர் சீனிவாசா ராமானுஜர்.1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்தார் ராமானுஜர். இந்த நாட்டின் ‘பிரில்லியன்ட் மைண்ட்ஸ்’ என்று கூறப்படும் பிரமிக்க வைக்கும் திறமை கொண்ட நபர்களில் ஸ்ரீனிவாச ராமானுஜருக்கு தனி இடம் உண்டு.சீனிவாச ராமானுஜரின் வியக்கவைக்கும் கணித அறிவை அனைவரும் தெரிந்து கொள்வதற்காகவும், இளைஞர்களிடையே கணிதம் பற்றிய ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும் ராமானுஜரின் பிறந்த தினத்தை தேசிய கணித தினமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். ராமானுஜரின் அற்புதமான பணி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு கணிதம் எவ்வளவு முக்கியமாக இருந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்து, மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது.எண்ணியல் கோட்பாடுகள் முடிவில்லா தொடர் வரிசைகள்,கணித பகுப்பாய்வு,புதிய சூத்திரங்கள் மற்றும் சமன்பாடுகளை வகுத்தல் போன்றவற்றில் பெரும் பங்காற்றினார்.இராமனுஜா பகா எண்கள்,இராமனுஜம்தீட்டா ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.ஆசிரியை செல்வி  ஜாய் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக ஆசிரியை நிவின்  நன்றி கூறினார்.
0Shares

Leave a Reply