புதுப்பேட்டையில் ரூபாய்.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சந்தை கூடம்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மணாங்கோயில் ஊராட்சி புதுப்பேட்டையில் ரூபாய்.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சந்தை கூடம் அமைக்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தென்காசி. எஸ்.ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, வட்டாட்சியர் குமார், வாட்டர் வளர்ச்சி அலுவலர் முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.