கோவை சரக, டி.ஐ.ஜி., அலுவலகத்தில் ஆண்டு தணிக்கை ஆய்வு மேற்கொண்டார்
கோவை சரக டி.ஐ.ஜி., முனைவர் எம் எஸ் முத்துசாமி ஐ பி எஸ் அவர்கள் ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஆண்டு தணிக்கை ஆய்வு மேற்கொண்டார் . ஈரோடு மாவட்ட குற்றப்பத்திரிகை கூடம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் மாவட்ட தனிப்பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களை ஆய்வு செய்தார்.நேற்று முன்தினம் 22.12.2022 அன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட குற்றப்பத்திரிகை கூடம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மாவட்ட தனிப்பிரிவு ஆகிய அலுவலகங்களை ஆய்வு செய்தார். இவ்வலுவலக பதிவேடுகள், கோப்புகள் – பராமரிப்பு மற்றும் வழக்குகள் கண்டுபிடிப்பு ஆகியவைகளை ஆய்வு செய்து நற்பணிக்காக பாராட்டினார். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்ப நலன் பற்றி விசாரித்தார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட எஸ்.பி., டாக்டர். வி.சசிமோகன், இ.கா.ப., ஏ.டி.எஸ்.பி., தலைமையகம் ,கே. பாலமுருகன், CWC , CCW ., P ஜானகிராம், DCB DSP. , G. அண்ணாதுரை, DCRB DSP ,S சேகர், SJHR DSP .G.நீலகண்டன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் முனைவர்.டி.கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.