மதுரையில் பாஜக சார்பில் தூய்மைப்பணி, உறுப்பினர் சேர்க்கை, இலவச பொது மருத்துவ முகாம்
மதுரை பாரதிய ஜனதா கட்சி சார்பில் வார்டு 15 காலங்கரை பகுதியில் தூய்மைப்பணி மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் தலைமையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல் தலைவர் மாணிக்க மூர்த்தி, புதூர் பாஸ்கர், சுவாமிநாதன், விக்ரமாதித்தன், ஆதிஸ்வரன், துணைத் தலைவர்கள் கீரைத்துறை குமார், சத்யம் செந்தில் குமார், பழனிவேல், மாவட்ட பொது செயலாளர்கள் ஜோதி மணிவண்ணன், துரை பாலமுருகன், வினோத்குமார், மகளிர் அணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலட்சுமி, செயலாளர்கள் செண்பக பாண்டி, ஹேமலதா, மெஹர் நிஷா, பொருளாளர் ராஜ் குமார், மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்கோ மணி, பொதுச் செயலாளர் ஆர் வி கணேசன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வடமலையான், ஐடி விங்க் மாநில செயலாளர் விஸ்வநாத், இரு கண்கள் ஆசிரியர் ஜி பி பாஸ்கர், ஐடி விங்க் மாவட்ட தலைவர் மணிவண்ணன், துணைத் தலைவர் சரவணன், ஐடி விங்க் வெங்கடேசன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் சங்கர் லால் ஆகியோர் தூய்மை பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து வார்டு 15ல் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சக்திவேல்,பாரிராஜா ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது. அப்பகுதி பெண்கள், இளைஞர்கள் பெரும்பாலானோர் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து மருத்துவ பிரிவு மாவட்டத் தலைவர் முரளி பாஸ்கரன் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவர்கள் டாக்டர் கணேஷ் பாபு, டாக்டர் பாலசுப்பிரமணியன், டாக்டர் கார்த்திக், டாக்டர் விக்னேஷ், டாக்டர் கலையரசன் மற்றும் பாரதி மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவ முகாமில் ஈடுபட்டனர். இதில் ரத்த சோகையால் கண்டறியப்பட்ட 48 நபர்களுக்கு அயன் மாத்திரைகள், அயன் டானிக் இலவசமாக வழங்கப்பட்டது. பிற நோயாளிகளுக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.