இனிமேல் லயோலா கல்லூரி பெயரை பயன்படுத்த மாட்டோம்.
இனிமேல் லயோலா கல்லூரி பெயரை பயன்படுத்த மாட்டோம்…தேர்தல் நேரங்களில் கருத்து கணிப்பு நடத்தும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் அறிவிப்புஅரசியல் காட்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தொடங்கிய தேர்தல் நேரங்களில் கருத்து கணிப்பு நடத்தும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்புசென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கே பிரபாகரன்,2004 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசியல் குறித்து கள ஆய்வுகளை செய்து பண்பாடு மக்கள் தொடர்பகம் மற்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில் 31 தேர்தல் கள ஆய்வுகளை நடத்தி உள்ளதாகவும் எங்களின் கருத்துக்கணிப்பு 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினர்.
தற்பொழுது தென்னிந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவில் செயல்படுகிற கட்சிகளுக்கு அரசியல் ஆலோசனை வழங்க “இந்திய அரசியல் ஜனநாயக யுக்தி” (IPDS)என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்.ஜனநாயகத்தை சிறிதளவு ஏனும் பேணி பாதுகாக்கும் கட்சிகளுக்கு எங்கள் வேலை இருக்கும் எனவும் கட்சிகள் எங்களை அணுகினால் அந்த கட்சிகளுக்கு வெற்றி பெற தேர்தல் யுக்திகளை வகுத்துக் கொடுப்போம் எனவும் தெரிவித்தனர்.தொடர்ந்து லயோலா கல்லூரியின் பெயரை பயன்படுத்த கூடாது என கல்லூரி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்கள்,*இனிமேல் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்ற பெயரை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் எனவும் இனிமேல் நாங்கள் இந்திய அரசியல் ஜனநாயக யுக்தி என்ற பெயரிலே எங்களது எல்லா நடவடிக்கைகளும் இருக்கும் எனவும் தெரிவித்தனர்*.எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சி மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் 13 சதவீதம் ஓட்டுகளை தனியாக நின்றாலே வாங்கும் எனவும் தற்போது வரை கணித்துள்ளதாக தெரிவித்தனர்…