டி.டி.வி.தினகரன் 60 வது பிறந்த நாள் விழாயொட்டி இலவசமருத்துவ சிறப்பு முகாம் .
திருவள்ளூர் டிச 20 : திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் உள்ள சார்லஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி க்ளினிக் மற்றும் அம்பத்தூர் பி வெல் மருத்துவமனையுடன் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 60 வது பிறந்த நாள் விழாயொட்டி இலவச மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஏ.ஏழுமலை கலந்து கொண்டு துவக்கி வைத்தார். திருவள்ளுர் மேற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர்.டி.சார்லஸ் இன்பசீலன் ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச மருத்துவ சிறப்பு முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை,சக்கரை நோய் பரிசோதனை,இதய நோய் பரிசோதனை,பொது மற்றும் எலும்பியல் மருத்துவம் உள்ளிட்டவை நோயாளிகளுக்கு பரிசோதிக்கப்பட்டன.அப்பொழுது திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஏ.ஏழுமலை இரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டார். முகாமில் டாக்டர்கள் சி.ஜெ.விஜயபாபு,கே.எம்.கணபதி, 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.