உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் குடும்பத்தினர் முடிவு.

Loading

திருவள்ளூர் டிச 19 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்காவில் மாலை முரசு தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தவர் சந்தானம் வயது (32), 16/12/23 அன்று பூண்டியில் இருந்து திருவள்ளூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சக நிருபர் ஏழுமலை என்பவரை  பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.அப்போது  சதுரங்கபேட்டை பகுதியில் சாலையின் வளைவில் இருசக்கர வாகனத்தில் திரும்ப முற்பட்டபோது போது சாலையின் பக்கவாட்டில் நின்றிருந்த ஜேசிபி இயந்திர மீது மோதி எதிரே வந்த தனியார் பேருந்து மீது விழுந்து தூக்கி வீசப்பட்டத்தில் அவருடைய தலைகவசம் உடைந்து தலையில் பலத்த காயமடைந்தார். சக நிருபர் ஏழுமலை என்பவர்  சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.தலையில் பலத்த காயம் அடைந்த நிருபர் சந்தானத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் அன்றைய தினமே மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.இதைத் தொடர்ந்து கணவரின் உடல் உறுப்புகளை  தானம் செய்ய அவர் மனைவி நந்தினி (31) முன்வந்துள்ளார்.
ஏற்கனவே சந்தானம் மாலை முரசு தொலைக்காட்யில் பணியில் இருந்த போது  கடந்த 2015 ஆம்  திருமணம் நடைபெற்ற  நான்காவது நாளிலே சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் சுயநினைவு இல்லாமல் தனியார் மருத்துவமனையில்  6 மாத காலம் சிகிச்சைக்குப் பின் மீண்டும் நினைவு திரும்பிய அவர் தற்போது வேறு ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஊத்துக்கோட்டை தாலுகா பகுதியில் நிருபராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்ததுள்ளார்.அவருடைய மனைவி நந்தினி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த செஞ்சிபானம்பாக்கம் பகுதியில் தனது தாயார் வீட்டில் இருந்த போது கடந்த 2019 ஆம் ஆண்டு  கால் இடரி கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் உடைந்து சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ச்சியாக கணவன் மனைவி இருவரும் விபத்தில் சீக்கி தற்போது கணவன் மூளைச்சாவு  அடைந்திருப்பது அவருடைய குடும்பத்தினர் சொந்த கிராமம் மற்றும் சக செய்தியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கணவரை இழந்து வறுமையில் வாடும் அவர் மனைவிக்கு அரசு வேலை அளித்து அவர்  குடும்பத்திற்கு  அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இந்த விபத்து தொடர்பாக  பென்னாலூர்பேட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *