வேலூர் ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியின் தீபம் ஏற்றும் விழா .

Loading

வேலூர் மாவட்டம் பேலூர் அடுத்த ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள,ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியின் தீபம் ஏற்றும் விழா ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மஹாலில் குத்துவிளக்கு தொடங்கிவைத்தனர்இந்நிகழ்ச்சியை  சிறப்பு விருந்தினர் டாக்டர் பிரபா துவக்கி வைத்தார். ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரி முதல்வர் வரவேற்புரைஆற்றினார் இந்நிகழ்ச்சியில் .டாக்டர் என். பாலாஜி  துவக்க உரையாற்றினார் . விழாவில் சிறப்பு விருந்தினர்களை கல்லூரியின் செவிலிய இணை இயக்குனர் பேராசிரியை லலிதா புருஷோத்தமன், அனைவரையும் அறிமுகப்படுத்தினார். விழாவில் டாக்டர் எம் .கண்ணகி இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைத்துறை புதியதாக செவிலியர் கல்வி பயில வந்திருக்கும் மாணவிகளை பாராட்டி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியின் சாதனைகளை எழுத்து வடிவில் சிறப்பிக்கும் செய்தி மடல் சக்தி அம்மா அவர்களின் ஆசியோடு சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது.விழாவில்கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் ,பெற்றோர்களும், கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply