அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவினர் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு

Loading

மதுரை அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு குழு தலைவர் முருகன் தலைமையில்  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் தை மாதம் முதல் நாள் (15.01.2023) தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா நடப்பது வழக்கம். கடந்த நான்கு வருடமாக தென்கால் விவசாய பாசன சங்கம் என்ற தனிநபர் அமைப்பை உருவாக்கி ஒரு குடும்பத்தை சார்ந்த நபர்கள் மட்டும் மேற்படி விழாவை ஆக்கிரமிப்பு செய்து ஐல்லிக்கட்டு விழாவை நடத்த முயற்சித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதற்கு ஆடசேபணை தெரிவித்து கிராம மக்கள் பலரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் அந்த மனு மீதான விசாரணையில் அனைத்து சமுதாய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பிரச்சனைகள் வருவதை தடுக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு கடந்த நான்கு வருடமாக பல்வேறு தரப்பினர் மாண்புமிகு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ததின் பெயரில் ((WP(MD)No.24983/2018) (WP(MD)No.211,212&351/2019),(WP(MD)No.526,650,710,807,808,809,560/2 020),(WP(MD)No.589,604/2021}}ன் மனுவில் தமிழக அரசே (மாவட்ட நிர்வாகம்) முன் நின்று மேற்படி ஐல்லிக்கட்டு விழாவை நடத்த மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மாவட்ட நிர்வாகம் ஐல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்தி முடிந்தது. ஆகவே வருகின்ற 15.01.2023 நடைபெறும் அவனியாபுரம் ஐல்லிக்கட்டு விழாவை நடத்த தனி ஒரு குடும்ப நபருக்கோ அல்லது தனி ஒரு அமைப்பிற்கோ அனுமதி வழங்காமல், அவனியாபுரம் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொதுக்கமிட்டிக்கு ஐல்லிக்கட்டு விழாவை நடத்த அனுமதி வழங்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் செயலாளர் தீத்தி பிச்சை, பொருளாளர் முனியசாமி,, துணைத் தலைவர்கள் சிவமணி, சேது, நாட்டாமை கல்யாணராமன் நிர்வாகிகள் ஏ ஆர் முருகேசன், கல்யாணசுந்தரம் கார்த்திகேயன் அன்பரசன், சீனிவாச பெருமாள், செல்வம், பிச்சைராஜன் மற்றும் அவனியாபுரம் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *