கஞ்சா , குட்கா , லாட்டரி விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு . S. சக்திகணேசன் I P S அவர்கள் கஞ்சா , குட்கா , லாட்டரி விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா , லாட்டரி தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 10 குற்றவாளிகள் கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது . கஞ்சா விற்பனை செய்த 1. சுலைமான் வயது 23 த / பெ அப்துல் ரஷீம் , 2. அலாவுதீன் வயது 30 த / பெ அப்துல்களி . மெயின் ரோடு , கீரப்பானையம் , 3. கமால்வுதீன் வயது 28 த / பெ முகமது இஸ்மாயில் , பிள்ளையார் கோவில் தெரு , கீரப்பாளையம் . 4. சூரியபிரகாஷ் வயது 23 த / பெ குமரேசன் , TTK நகர் , கீரப்பாளையம் 5. அபினேஷ் சுந்தர் வயது 21 த / பெ திருமுருகன் . 6. பூவரசன் வயது 19 த / பெ பாலகிருஷ்ணன் , மாரியம்மன் கோவில் தெரு . C. மேலவன்னீயூர் , 7 . சந்தோஷ் வயது 23 த / பெ முத்து . கிழக்கு தெரு . மாளிகைமேடு . பண்ருட்டி ஆகிய 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் . மேலும் இவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . லாட்டரி விற்பனை செய்த ராஜேஷ் வயது 38 த / பெ தட்சணாமூர்த்தி , சின்ன காசியார் தெரு , சிதம்பரம் என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் . III குட்கா விற்பனை செய்த 1. நெய்வேலி ராமஜெயம் வயது 48 த / பெ வேலு , 2. பாபு வயது 44 த / பெ ராஜமாணிக்கம் . 3. வெங்கடேசன் வயது 48 த / பெ செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அவரிடமிருந்து 16.592 கிலோ கிராம் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .