அதிமுக சார்பில் பால் விலை உயர்வு, மின் கட்டணை உயர்வை குறைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

திருவள்ளூர் டிச 16 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒன்றிய அளவில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமஞ்சேரி எஸ்.மாதவன் தலைமை தாங்கினார்.  இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி‌.வி ரமணா கலந்து கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், அவைத் தலைவர் கந்தசாமி,  பூண்டி ஒன்றிய கவுன்சிலர் விஜி, நிர்வாகிகள் விஜயலட்சுமி ராமமூர்த்தி, தமிழ்செல்வி, நரேஷ், சுந்தரேசன், சத்தியமூர்த்தி, அம்புரோஸ், எழிலரசன், உத்தர்ராஜ், ராமதாஸ் சுலோட்சனா மோகன்ராவ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே போல் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு பால் விலையை குறைக்க வேண்டும். சொத்து வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடம்பத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுஜாதா சுதாகர், நிர்வாகிகள் சிற்றம் சீனிவாசன், இன்பநாதன், பேரம்பாக்கம் ஆர்.டி.இ. சந்திரசேகர், ராம்குமார், எஸ்.ஏ.நேசன், சவுந்தர்ராஜன்,  தமிழ்செல்வி ரமேஷ், வேல்முருகன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே போல் திருவள்ளூர் மத்திய மாவட்டம்,  திருவள்ளூர் தெற்கு ஒன்றிய  அதிமுக சார்பில் காக்களூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் புட்லூர் ஆர்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் எஸ்.ராஜசேகர், பி.சந்திரன், பி.சேகர், சி.செந்தில், பி.சுப்பிரமணி, சி.மோகனசுந்தரம் என்கிற இளையா, பி.ஜெயபால், எட்டியப்பன், கோசல் ராமன், ஜெய்சங்கர், விஜயகுமார், ரகுபதி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே போல்திருவள்ளூர் மத்திய மாவட்டம்,  திருவள்ளூர்  வடக்கு ஒன்றிய   அதிமுக சார்பில் ஈக்காட்டில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.பூங்கோவன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்எஸ்ஏ மணிமாறன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர்  பி.ஜெயபால். பெருமாள்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் பி.பக்தவச்சலம், எம்.பப்பி முனுசாமி, டி.கலாவதி துரை,  வி.துளசிராமன்,  எம்.மணி, எஸ்.ருதுபாலா, ஜெ.புல்லட்ரவி, செவ்வை நிரஞ்சன் சம்பத்குமார், ஆர்.தீபா ராமச்சந்திரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *