புதுச்சேரி முதல்வர் N.ரங்கசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி, நெல்லிதோப்பு தொகுதி, கதிர்காமம் தொகுதி ஆகிய தொகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 3 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கழிவு நீர் உட்கோட்ட பிரிவு மூலம் பாதாள கழிவுநீர் தொட்டிகளில் குழாய்கள் அமைத்து மூன்று தொகுதிக்கு உட்பட்ட 1500 வீடுகளுக்கு பாதாள கழிவுநீர் இணைப்பு கொடுப்பதற்கான பூமி பூஜை விழாவை புதுச்சேரி முதல்வர் N.ரங்கசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை துறை அமைச்சர் K.லட்சுமிநாராயணன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களானG.நேரு (எ) குப்புசாமி M.L.A. K.S.P.ரமேஷ் M.L.A. J.ரிச்சர்ட் ஜான்குமார் M.L.A. உட்பட மேலும் பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, பொது சுகாதாரப் பிரிவு செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர்… மேலும் இவ்விழாவில் அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.