பாலக்கோட்டில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் .
செவிடன் காதில் ஊதிய சங்கு போல திமுக அரசு செயல்படுவதாக பாலக்கோட்டில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பேச்சு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து ஒன்றிய அதிமுக கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும்,செவிடன் காதில் ஊதிய சங்கு போல மக்கள் பிரச்சனையை திமுக அரசு கையாளுவதாகவும் மேலும் விலைவாசி
விலை உயர்வை திரும்ப பெற கோரியும், திமுக ஆட்சியில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை காக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், தலை விரித்தாடும் கஞ்சா போதை பொருள் கலாச்சாரத்தை தடுக்க விடியா திமுக அரசை கண்டித்தும் கண்டன உரையாற்றினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வழக்கறிஞர் செந்தில், நகர செயலாளர் ராஜா, மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாவட்ட கவுண்சிலர் சரவணன், அண்ணாமலை மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.