எண்ணும் எழுத்தும் “திட்டத்தின் மாதிரி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
எண்ணும் எழுத்தும்” திட்டம் ஈரோடு மாவட்டத்தில் 1189 பள்ளிகளைச் சார்ந்த 37 ,718 மாணவர்கள் பயன் பெற்றனர்.!ஈரோடு நவம்பர் 15 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் அவல்பூந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் “எண்ணும் எழுத்தும் “திட்டத்தின் கீழ் செயல்படும் மாதிரி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஹெச் கிருஷ்ணனுண்ணி ஐஏஎஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் பொழுது மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது… தமிழக முதலமைச்சர் 13 6 2021 அன்று திருவள்ளூர் மாவட்டம் புலன் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2022-23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு “எண்ணும் எழுத்தும் “என்ற முன்னோடி திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள் பாட வரியாக உருவாக்கப்பட்ட ஆசிரியர் கையேடுகளும் ,பயிற்சி நூல்களும் ஒவ்வொரு குழந்தையும் தனக்கு தெரிந்த கற்ற நிலையில் இருந்து படிப்படியாக தனது கற்றலை வளர்த்துக் கொண்டு செல்ல உதவும் மேலும் குழந்தைகளின் ஆற்றலை மகிழ்ச்சியாகும் வகையில் செயல்பாட்டுக் களம் ,படைப்புக்களம் ,படித்தல் களம் ,மற்றும் பொம்மலாட்ட களம் போன்ற உருவாக்கப்பட்டுள்ளது மேலும் குழந்தைகளின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது இதனால் குழந்தைகளுக்கு பிடித்த கதைகள் பாடல்கள் விளையாட்டுகள் புதிர்கள் கலைகள் மற்றும் கைவினை பொருட்களால் “எண்ணும் எழுத்தும் “வகுப்புகள் நிறைந்துள்ளது இந்நிகழ்வில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான காணொளி கைப்பேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிட்டு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஆசிரியர் கையேடு சான்றிதழ் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினார்கள் இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாதிரி பள்ளிகள் மற்றும் கேஜிபி பள்ளிகள் என மொத்தம் 1189 பள்ளிகளை சேர்ந்த 37 ஆயிரத்து 718 மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார் தொடர்ந்து தொடர்ந்து மொடக்குறிச்சி வட்டம் அவல்பூந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் “எண்ணும் எழுத்தும் ” மாதிரி வகுப்புகளை பார்வையிட்டு அனைத்து குழந்தைகளுக்கும் கணினியில் பயில அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் ஐந்து நாட்களாக பள்ளி வராத மாணவ மாணவியர்களை கண்டறிந்து தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவது பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு மற்றும் பள்ளி வளாகத்தில் சிறிய காய்கறி தோட்டம் ஒன்று அமைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்துனர் நிகழ்வின்போது அவல்பூந்துறை ஊராட்சி தலைவர் சித்ரா மொடக்குறிச்சி வட்டாட்சியர் சண்முகசுந்தரம் ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் ரமேஷ் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல் சரவணன் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பலர் உடன் இருந்தனர்