தி.மு.க. அரசை கண்டித்தும் பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
![]()
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் வீரகனூர் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ சிலைக்கு எதிரில் வீரகனூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வீரகனூர் நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் சேலம் புறநகர் மாவட்ட பொருளாளர் ஜெகதீசன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வீரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் முத்துலிங்கம், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் JCB கணேசன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயராமன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், தலைவாசல் கவுன்சிலர் ெ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பாலகிருஷ்ணன், லத்துவாடி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி குழந்தைவேல், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் வரகூர் ராமசாமி, பெரியேரி சேகர், சிறுவாச்சூர் பெரியசாமி தகவல் தொழில்நுட்ப பிரிவு தெற்கு ஒன்றிய செயலாளர் அருள் வீரகனூர் பேரூராட்சி சூரிய பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சிகளிலும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

