ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்வு : ஒரே நாளில் 477 மில்லியன் கன அடி இருப்பு உயர்ந்தது.

Loading

திருவள்ளூர் டிச 12 : மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று காலை முதல் விட்டு விட்டு லேசாக மழை பெய்து வந்தது. அதனைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் கனமழை கொட்ட ஆரம்பித்து விடிய விடிய கொட்டி தீர்த்தது.இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் மாண்டஸ் புயல் மழையால் நேற்று விடிய விடிய  பெய்த கனமழை காரணமாக நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து  இருப்பதாக நீர்வளத் துறையினர் தெரிவிக்கின்றனர்.      சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில்  மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி  2681 மில்லியன் கன அடி நீர் இருப்பும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும்   மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர்  என 2005 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.     புழல் ஏரியில் இன்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2508  மில்லியன் கன அடி நீர் உள்ளது நீர்வரத்து  2795  கன அடி‌யாகவும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 187 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அணையின் பாதுகாப்பு கருதி புழல் நீர் தேக்கத்தில் இருந்து 100 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியில் இன்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான  1081 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 554 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது நீர்வரத்தாக 287 கன‌அடி வந்து கொண்டிருக்கிறது.  செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2864  மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர் மழை நீர் என 2177 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 131 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி   செம்பரம்பாக்கத்தில் இருந்து 100 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கண்ணன்கோட்டையில் இன்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் மான்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் உள்ள நீர் இருப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 477 மில்லியன் கன அடி நீர் இருப்பு உயர்ந்திருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *