சோனியா காந்தியின் 76 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அன்னை சோனியா காந்தியின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு “ராஜீவ் நட்பகம்” சார்பில் சென்னை ராயபுரத்தில் உள்ள மனநலம் குன்றிய மழலையர் இல்லமான “நிர்மலா சிசுபவனில்” கொண்டாடப்பட்டது. முன்னதாக”ராஜீவ் நட்பகம்” தலைமையகத்தில் திருவொற்றியூர் ஜி.பொன்னுரங்கம் பி.சி.சி கொடியேற்றி அன்னை சோனியா காந்தியின் தியாகங்களை பற்றி பேசினார்.அதனையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள “நிர்மலா சிசுபவன்” வளாகத்தில் அங்குள்ள நூற்றுக்கணக்கான மனநலம் குன்றிய குழந்தைகளுடன் இரண்டு மணி நேரம் அவர்களுடன் ஆதரவாக இருந்தனர்.ராஜீவ் நட்பக நிறுவனர் க. இராமலிங்கஜோதி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து மார்ட்டின் அங்குள்ள குழந்தையின் கையால் அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.அங்குள்ள குழந்தைகளுக்கு ஆப்பிள், மாதுளை,மலைவாழை, பலூன் மற்றும் விளையாட்டு பொருட்கள், மேலும் மில்க் பிக்கீஸ் போன்ற பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.ஷாஜகான், மாமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.பாபுசுந்தரம், ஆர்கேநகர் மூன்றாவது சர்கிள் காங்கிரஸ் தலைவர் டி.கே.மூர்த்தி,வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கே.வி.எஸ்.தயாளன்,மனித உரிமை துறை மாநில செயலாளர் பி.வேலா, ராஜீவ் நட்பகம் மகளிர் அணி தலைவி மாத்தூர் ரங்கநாயகி,மாநில பேச்சாளர் அதிரடி ஆசைத்தம்பி,வடசென்னை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜகாந்தி, ஆர்.எஸ்.கலைமணி, ஈ.எஸ்.பார்த்தசாரதி,ராஜன் காந்தி,ஜெ.ஜெயப்பிரகாஷ்,டி.ஆனந் தராஜ்,வட்ட தலைவர் வி.கே.செல்வராஜ், எம்.ஏழுமலை மற்றும் காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.