மீட்பு படையினர் 40 பேர் கொண்ட குழுவினரை எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவள்ளூர் டிச 09 : தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இதையொட்டி கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பூந்தமல்லி பெட்டாலியன் 13 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 40 பேர் கொண்ட குழுவினரை திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் ரவி மேற்பார்வையில் விஷ்ணு, கோகுல், ரவிச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் 3 குழுவாக பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கு கயிறு, ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், முதலுதவி மருந்து பெட்டகம், ஸ்ட்ரக்ச்சர், ஜெனரேட்டர், விளக்குகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் கொடுத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பின்னர் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந் து கன மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.